2019 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி) | |
கன்னி ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பது, இந்த மாதம் முழுவதும் சாதகமற்ற நிலையை காட்டுகின்றது. ராகு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிலும், கேது 4ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமற்ற பலனைத் தரக் கூடும். மற்ற கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை என்றாலும், புதன் மற்றும் சுக்கிரன் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், சற்று ஆறுதலான சூழல் உண்டாகும்.
குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்பம் மற்றும் நிதி நிலையில் அதிக பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும். அர்தஷ்டம சனியின் தாக்கம் இந்த மாதம் அதிகமாக இருக்கும். உங்கள் உடல் நலம் மற்றும் உத்தியோகம் பாதிக்கப்படலாம். அதிக மன அழுத்தம் நிறைந்திருக்கும். விடயங்கள் உங்களை பீதி அடைய செய்யும் அளவிற்கு, உங்கள் கட்டுபாடின்றி போகக் கூடும்.
இந்த மாதம் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசிக்கு பெயருவதால், கடுமையான சோதனை காலம் நிலவும். இதனால் உங்கள் பதற்றமும், மன அழுத்தமும் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்து அடுத்த 1௦ வாரங்களுக்கு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic
Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.