2019 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 8 மற்றும் 9ஆம் வீட்டிற்கு பெயருவது அவ்வளவு சிறப்பாக இல்லை. சுக்கிரன் மற்றும் புதன் இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும் கேது 12ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார்கள். குரு உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.
எனினும் ஒரு பலவீனமான விடயம் என்னவென்றால், செவ்வாய் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும், சனி பகவான் 12ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கக் கூடும். செப்டம்பர் 18, 2019, முதல் சில வாரங்களுக்கு, உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் இந்த மாதம் இருக்கும். அதன் பின் செப்டம்பர் 19, 2019க்கு மேல் ஏழரை சனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.


எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் விரைவாக எடுத்து, முடிந்த வரை செட்டில் ஆகி விடுவது நல்லது. நவம்பர் 2019 முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீங்கள் சோதனை காலத்தை சந்திக்க இருப்பதால், எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலும், அதற்கு முன் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதன் பின் செயல் படுவது நல்லது.


Prev Topic

Next Topic